நடுரோட்டில் குழந்தைகளை கிடத்தி பெற்ற தாய் செய்த செயல்..! அதற்கு அவர் சொன்ன அதிர்ச்சி காரணம்! உளுந்தூர்பேட்டை சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு உளுந்தூர்பேட்டை அடுத்த குவடு கிராமத்தைச் சேர்ந்த வள்ளி கந்தன் என்பவர் தன்னுடைய மனைவி அபிராமியை உன் தகப்பனார் வீட்டிலிருந்து நகை பணம் வாங்கி வரச்சொல்லி தினமும் குடித்துவிட்டு அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.


இதனை அடுத்து வள்ளி கந்தன் மனைவி அபிராமி இரண்டு குழந்தைகளுடன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து என் கணவர் வள்ளி கந்தன் என்னை பணம் நகை கேட்டு தினமும் துன்புறுத்தி வருகிறார் என்று புகார் கொடுத்துள்ளார் அந்தப் புகாரின் பேரில் வள்ளி கந்தனை காவல்துறை அழைத்து வந்து விசாரித்து கொண்டிருக்கும்போது வள்ளி கந்தன் உடைய தாயார் என் மகனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விட்டுள்ளாயே என்று சொல்லி அபிராமியும் அவருடைய குழந்தையை தாக்கியுள்ளார் .

அடி தாங்காமல் அபிராமியும் அவர்கள் குழந்தை தீபா மற்றும் சிறு குழந்தை ஆகியோருடன் சேலம் சென்னை சாலையில் படுத்து கொண்டு நாங்கள் மூவரும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று கண்ணீர் மல்க சாலையில் தற்கொலை செய்து கொள்வதற்காக முயன்றுள்ளார்.

இதனால் சிறு நேரம் உளுந்தூர்பேட்டை விருத்தாச்சலம் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசி அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து வள்ளி கந்தன் உடைய மனைவி அபிராமியும் அவர்கள் குழந்தைகள் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து வள்ளி கந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் உள்ளே அழைத்துச் சென்றார். தற்போது வள்ளி கந்தன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .