கல்யானம் ஆன மகன் செய்த காரியம்! அடித்தே கொலை செய்த தாய்!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தாய் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றார்.


திருவிடைமருதூரை அடுத்த வேப்பத்தூரைச் சேர்ந்தவர் 65 வயது மாரியம்மாள். இவரது மகன் கருப்பையனுக்கு வயது 40.

மது இல்லாவிட்டால் கருப்பையனுக்கு இருப்பு கொள்ளாது. போதைக்கு அடிமையான அவரால் குடும்பத்தில் பிரச்சினையோ பிரச்சினைதான். அதனால் அவரது மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். கடைசியில் மாட்டிக்கொண்டது தாய் மாரியம்மாள் தான்.

கருப்பையன் மது அருந்திவிட்டு அவ்வப்போது தாய் மாரியம்மாள் வீட்டுக்குச் சென்று தகராறு செய்வது வழக்கம். பெற்ற தாயாக இருந்தாலும் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது மாரியம்மாள் விவகாரத்தில் பலித்தே விட்டது

மது அருந்த பணம் தீர்ந்த நிலையில் தாயாரிடம் சென்று பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் கருப்பையா. தன்னிடம் பணம் இல்லை என்று தாய் கூறியுள்ளார். ஆனால் இதனை கேட்காமல் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார் கருப்பையா.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாரிய்யம்மாள் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று மதுபோதையிலிருந்த மகன் கருப்பையனை உருட்டுக் கட்டையால் தாக்கினார். இதில் கருப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மாரியம்மாள் காவல் நிலையத்தில் சரணைடைந்தார்.