விபத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலமும், விபத்துக்குள்ளான பைக்கும் ஒரே வேனில் கொண்டு செல்லும் காட்சி காண்போரின் மனதை பதற வைத்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தின் மீது கிடத்தப்பட்ட பைக்..! நெஞ்சை உலுக்கி எடுக்கும் சம்பவம்! காரணம் போலீஸ்!

பிகாரில் நடந்த விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வழக்கமாக விபத்துகளில் உயிர் இழந்தால் உயிரிழந்தவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி ஆம்புலன்சில் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் பீகாரில் நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்த இளைஞரின் உடலை பெகுசாராய் போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?
முறையான வாகனத்தில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்காமல் வேன் ஒன்றில் விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கொண்டு செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் இறந்தவரின் உடலை வேனில் வைத்து அந்த சடலத்தின் மீது விபத்துக்குள்ளான வாகனத்தை வைத்திருக்கும் காட்சி இணையத்தில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவரின் உடல் மேலே விபத்துக்குள்ளான பைக்கை போட்டு வேனில் கொண்டு செல்லும் புகைப்படம் காண்போரின் மனதை பதற வைத்துள்ளது. இதில் இறந்தது மனிதன் மட்டுமல்ல மனிதாபிமானமும் கூட என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். விபத்துக்குள்ளான பைக் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலையும் ஒரே வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.