டேய் அவள் என் தங்கச்சிடா! விபச்சாரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை பார்த்து கதறிய அண்ணன்!

பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப் இருந்த தன்னுடைய தங்கையை அவருடைய சகோதரனே காப்பாற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


பிரகாஷ் ( வயது 30) என்பவர் சென்னையை சேர்ந்தவர். பிரகாஷ் தன்னுடைய நண்பரைப் பார்ப்பதற்காக செல்ல இருந்திருக்கிறார். பிரகாஷ் செல்லும்பொழுது சிறுமி ஒருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் பிரகாஷ் அந்த சிறுமி தன்னுடன் வந்தால் பணம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனை நம்பி அந்த இளம்பெண்ணும் பிரகாஷ் உடன் சென்றிருக்கிறார். இருவரும் ஒன்றாக இணைந்து காரில் வில்லிவாக்கத்தில் இருந்து புறப்பட்டு இருக்கின்றனர்.

பிரகாஷும் அந்த சிறுமியும் சென்றுகொண்டிருந்த கார் ஆனது அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்தது . அப்பொழுது அந்தப் சிறுமியின் அண்ணன் அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரது தங்கையை வேறு ஒரு ஆணுடன் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

உடனே அந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்த பிரகாஷ் கீழே இறங்குமாறு கூறியிருக்கிறார் . பின்னர் பிரகாஷ் உடன் சேர்ந்து சிறுமியின் சகோதரன் சண்டையிட்டு இருக்கிறார். இன்னிலையில் பிரகாஷின் நண்பர் பஸைல் என்பவர் அந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்.

பின்னர் இவர்கள் மூவருக்கும் இடையில் மிகப் பெரிய சண்டை நடைபெற்று உள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூளைமேடு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருக்கின்றனர்.

காவல்துறை அதிகாரிகள் வருவதைப் பார்த்த பஸைல் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே பிரகாஷ் மற்றும் அந்த சிறுமியின் சகோதரனையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையின்போது பிரகாஷின் மீது ஆவடி காவல் நிலையத்தில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது மேலும் பிரகாஷ் இடம் விசாரணை செய்த பொழுது அவருடைய வந்தபின் தன்னுடைய தோழி என்றும் அவர்கள் இருவரும் இணைந்து சித்தாலபாக்கத்திலுள்ள பஸைலின் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தனர் என்றும் கூறினார்.

பின்னர் நடந்த போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது பஸைல் என்பவர் பிரகாஷின் கஸ்டமர் என்றும் அவரிடம் இந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக தான் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளதாக ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்ட அந்த சிறுமி மற்றும் அவரது சகோதரர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதனை கேட்ட போலீசார் பிரகாஷின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.