தாயின் சடலத்துடன் 2 இரவுகள் தூங்கி எழுந்த விபரீத மகன்..! 4 திருமணம் செய்து 4 மனைவிகளையும்..? பாளையங்கோட்டை பகீர்!

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தாயின் உடலின் அருகில் அவரது மகன் இரண்டு நாட்கள் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வானமாமலை , விமலா என்ற தம்பதியினர் பாளையங்கோட்டையில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் மூவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வே துறையில் பணியாற்றி வரும் வானமாமலை திடீரென்று உயிரிழந்திருக்கிறார். பணியில் இருந்தபோது உயிரிழந்ததால் அவரது வேலை மூத்த மகனுக்கு வழங்கப்பட்டுள்ளது . துரதிர்ஷ்டவசமாக அவரது மூத்த மகனும் உயிரிழந்தமையால் அந்த பணியானது இளைய மகனுக்கு கைமாறி உள்ளது.

வானமலையின் இளைய மகனின் பெயர் முகிலன் (வயது 50). இவருக்கு சற்று மனநிலை சரியில்லாத காரணத்தால் நான்கு திருமணங்கள் நடைபெற்று நான்கும் சரியாக அமையவில்லை. பின்னர் அவர் தன்னுடைய தாயாருடன் வசித்து வருகிறார். மனநிலை சரியில்லாத காரணத்தால் இவர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு விட்டார்.

பணி நிமித்தமாக அகிலன் விருதுநகரில் தன்னுடைய தாயாருடன் தங்கி வந்திருக்கிறார்.

 பணியை விட்டு நீக்கப்பட்ட பின்பும் அவர் அதே இடத்தில் வசித்து வந்துள்ளார் அ. கிலனின் தாயாருக்கு சொந்தமான வீடுகள் பாளையங்கோட்டையில் இருந்துள்ளன. அங்கு வாடகை வசூலிப்பதற்காக மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் அங்கு சென்று வருவதை தங்களுடைய வழக்கமாக இருவரும் கொண்டுள்ளனர்.

அந்தவகையில் அகிலனும் அவரது தாயாரும் இணைந்து பாளையங்கோட்டைக்கு வாடகை வசூலிப்பதற்காக சென்றுள்ளனர். அகிலனின் தாயார் வாடகைக்கு விட்டிருந்தார். வீட்டில் வசித்து வந்த ஒருவர் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து காலி செய்து உள்ளார் . அவர் அளித்த அட்வான்ஸ் பணத்தை திரும்ப பெறுவதற்காக அகிலனின் தாயாரை சந்திப்பதற்காக வந்திருக்கிறார் .

அப்போது அவர் உள்ளே நுழையும் போது ஒரே துர்நாற்றம் வீசியுள்ளது. அப்படி பார்க்கும் பொழுது அகிலனின் தாயார் விமலா இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவர் இறந்ததை பார்த்த அந்த நபர் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அந்த நபரை உள்ளே விடாமல் அகிலன் தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

பின்னர் அவர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

 தகவல் அறிந்து வந்த போலீசார் அகிலனின் தாயாரை பார்ப்பதற்காக வந்துள்ளனர். அப்போது அகிலன் தன் தாயாரின் உடலைப் பார்ப்பதற்கு அவர்களை அனுமதிக்காமல் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் . பின்பு நீண்ட போராட்டத்தை அடுத்து போலீசார் விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.