ஒன்பதே நெடியில் அவித்த முட்டையை உரிப்பது எப்படி? 30 லட்சம் முறை பார்க்கப்பட்ட வீடியோ உள்ளே!

சமூக வலைத்தளத்தில் 9 நொடியில் அவித்த முட்டையை உரிக்கும் வீடியோ பதிவானது இதுவரை 30 லட்சம் முறை பார்க்கப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.


பொதுவாகவே இணையதளத்தில் பல விஷயங்கள் வைரலாக பரவி வருவதை பார்த்திருப்போம் . அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ பதிவு வைரலாகி கொண்டிருக்கிறது .அது வேறு ஒன்றுமில்லை அன்றாட உணவில் நாம் எடுத்துக்கொள்ளும் முட்டையைப் பற்றி தான் . அந்த வீடியோவில் ஒருவர் அவித்த முட்டையை எளிமையான முறையில் அவித்த முட்டையின் ஓட்டை எப்படி பிரிக்கலாம் என்று விளக்கி காட்டி இருக்கிறார்.

அவர் முதலில் அவித்த முட்டையை எடுத்து ஒரு டம்ளரில் வைத்துக்கொள்கிறார் பின்னர் அதில் குளிர்ந்த நீரை பிடித்துக் கொள்கிறார் . சில வினாடிகளுக்கு அந்த தம்ளரை தன் கையில் வைத்து குளுக்குகிறார் . உடனே தம்ளரில் இருந்த அந்த முட்டையை வெளியே எடுத்து தோலை ஒருபுறமாக இழுத்தவுடன் அது மொத்தமாக ஓட்டை விட்டு வெளியே வருகிறது.

இவ்வாறாக எளிமையான முறையில் அவித்த முட்டையின் தோலை பிரித்து எடுக்கலாம் என்று அந்த நபர் இந்த வீடியோவில் காண்பித்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இவ்வளவு எளிமையான முறையில் அவித்த முட்டையின் தோலை பிரிக்க முடியுமா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுவரை இந்த வீடியோவானது 30 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவிற்கு 74,000 லைக்கும் குவிந்துள்ளது.