ரெண்டுமே பெத்த பெண் குழந்தைங்க..! தந்தை செய்து கொண்டிருந்த தகாத செயல்! வீட்டுக் கதவை திறந்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெற்ற குழந்தைகள் என்று கூட பாராமல் பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் கன்னி ராஜபுரத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி 5 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்துவின் மனைவி தினமும் அருகில் இருக்கும் பகுதிக்கு கூலிக்கு வேலை பார்ப்பவர் ஆவார்.

அப்படியாக காலையில் வேலைக்காக சென்று விட்ட மாரிமுத்துவின் மனைவி தன் வேலை முடிந்த பின்பு வீடு திரும்பியுள்ளார் . அப்போது அவரிடம் அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் கதறிக்கொண்டே அதிர்ச்சிக்குரிய தகவல்களை கூறியுள்ளனர். இதனைக் கேட்ட மாரிமுத்துவின் மனைவி மிகுந்த கோபம் அடைந்து இருக்கிறார்.

அதாவது மாரிமுத்து பெற்ற குழந்தைகள் என்று கூட பாராமல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய சொந்த மகள்கள் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். இதனால் அந்த குழந்தைகள் இருவரும் மிகவும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர் . இந்த சம்பவத்தை பற்றி அறிந்த மாரிமுத்துவின் மனைவி தன் கணவர் மீது கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மாரிமுத்துவை அதிரடியாக கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர் . பெற்ற பெண் குழந்தைகளையே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது என்பது வேதனைக்குரியதாகும்.