குஜராத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
பற்றி எரிந்த தீ! உயிரை துச்சமாக்கி 2 மாணவிகளை மீட்ட வீர இளைஞன்! வைரல் வீடியோ!
இச்சம்பவத்தின் போது தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களின் உயிரை காப்பாற்றினார். குஜராத்தின் சூரத் பகுதியில் உள்ள தக்ஷயாஸிலா என்ற வணீக வளாகத்தில் நேற்றைய தினம் சற்றும் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட இந்த கட்டிடத்தின் 2-வது 3-வது மற்றும் தளத்தில் டுடோரியல் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
தீ இந்த தளங்களிற்கும் மிக விரைவாக பரவ ஆரம்பித்தது. உடனே அங்கிருந்த மாணவர்கள் கீழே இறங்க வழி இல்லாமல் மேல் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இருப்பினும் இந்த தீயில் சிக்கி ஆசிரியர் உட்பட 19 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். இந்த விபத்தின் பொழுது "கேத்தன் ஜோவார்த்யா" என்ற ஒரு இளைஞர் மட்டும் தன்னுடைய உயிரை துட்சமாக எண்ணி இரண்டு மாணவிகளின் உயிரை தீ விபத்தில் விபத்தில் இருந்து காப்பாற்றினார்.
அவர் மாணவிகளை காப்பாற்றிய விடியோவை ஹிதேஷ் பாண்டியா என்பவர் சமூக வலிதளத்தில் பதிவு இட்டார். மேலும் கேப்சனாக, "தன்னுடைய உயிரை பற்றி நினைக்காமல் இரண்டு பெண்களின் உயிரை காப்பாற்றிய தைரிய மிக்க மானிடர் தான் கேத்தன் ஜோவார்த்யா!! " என்று பதிவு போட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலிதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த இளைஞருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது..
பின்னர் அந்த மாநிலத்தின் முதல்வர் விஜய ரூபாணி தீ விபத்தில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 19 என்று கூறியுள்ளார். https://twitter.com/Hiteshpandya21/status/1131927463045419010