வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற 35 வயது ஆண்! வயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி! ஸ்கேன் ரிப்போர்ட்டில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

காஷ்மீரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் துடித்து வந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த பொழுது அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியது அவரது குடும்பத்தினரை மிகவும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


14 வயது சிறுமி ஒருவர் தெற்கு காஷ்மீர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் துடித்து இருக்கிறார். இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை அவரை மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மந்திரவாதி அந்த சிறுமியை வைத்து பூஜை செய்துள்ளார். பூஜைக்கு பின்பும் தொடர் வயிற்று வலியால் அந்த சிறுமி அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவரது பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். 

பரிசோதனையின் முடிவில் அந்த 14 வயது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனைக் கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சிறுமியின் வீட்டிற்கு அருகில் 35 வயதுடைய அவரது உறவினர் ஒருவர் இருந்துள்ளார். சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த நபர் சிறுமிக்கு மயக்க மாத்திரையை அளித்து அவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

இம்மாதிரி அடிக்கடி அந்த நபர் சிறுமியிடம் தவறாக நடந்து இருக்கிறார் என்பது கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என்றும் அவர் அந்த சிறுமியை மிரட்டி தன்னுடைய ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் மூலமாக தான் 14 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் அனைத்தையும் அந்த நபரே தன்னுடைய வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார் என்றும் போலீசார் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.