காதலி ஆடையை அவிழ்க்கும் வீடியோ: இணையதளத்தில் வெளியிட்ட இளைஞர்! பிறகு நேர்ந்த விபரீதம்

தனது முன்னாள் காதலி ஃபோனில் பேசியபடி ஆடையை அவிழ்க்கும் வீடியோவை, ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பையின் வடகிழக்கே உள்ள போவய் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரே கைது செய்யப்பட்டவர். இவர், தன்னைவிட ஒரு வயது அதிகம் உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், தனது காதலி பற்றிய வீடியோ ஒன்றை ஆபாச இணையதளத்தில் அந்த இளைஞர் பதிவிட்டதாகப் புகார் கிளம்பியுள்ளது. 

 

வீடியோ பற்றி நண்பர்கள் பலரும் தெரிவித்ததை தொடர்ந்து, அதனை சம்பந்தப்பட்ட பெண்ணே பார்த்துள்ளார். அவர்கள் 2 பேரும் வீடியோ கால் மூலமாகப் பேசியபோது, அந்த பெண் ஆடையை அவிழ்த்துவிட்டு, நிர்வாணமாக தனது உடம்பை காட்டியதாகக் கூறப்படுகிறது. இதை வீடியோவாக பதிவு செய்த கிரிமினல் காதலன், பிரபல ஆபாச இணையதளம் ஒன்றில் பதிவேற்றியதும் தெரியவந்தது.

 

இதுகுறித்து தனது காதலனிடம் அந்த பெண் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அவர், அப்படி எந்த வீடியோவையும் பதிவிடவில்லை என மறுத்துவிட்டதாக, தெரிகிறது. இதையடுத்து, மன விரக்தி அடைந்த அந்த பெண், குறிப்பிட்ட இளைஞனிடம் இருந்து பிரிந்துவிட்டார். இருவருக்கும் இடையிலான காதலும் முறிந்துவிட்டதாக, தெரிகிறது.

 

இதன்பேரில், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

   அத்துடன், அந்த வீடியோவை வெளியிட்ட ஆபாச இணையதளத்தையும் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் மும்பை போலீசார் தடை செய்துள்ளனர். எனினும், சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய முழுவிவரத்தை தெரிவிக்க, போலீசார் மறுத்துவிட்டனர்.