ஒன்றா..இரண்டா..? கலர் கலராக விதவைப் பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த அஜ்மல்..! செல்போன் கேமராவால் சிக்கிய பின்னணி!

மேட்ரிமோனி மூலமாக விதவைப் பெண்களை ஏமாற்றி அவர்களிடம் நெருக்கமாக புகைப்படங்களை எடுத்து அஜ்மல் என்ற நபர் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை தண்டையார்பேட்டையில் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவரிடம் மேட்ரிமோனி மூலம் அஜ்மல் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக அஜ்மல் அளித்த வாக்குறுதியின் பேரில் அந்தப் பெண் அவனிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இன்னிலையில் அஜ்மலின் மொபைலில் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து மெசேஜ்களை பார்த்தபோது தன்னிடம் பேசிய படியே மற்ற பெண்களிடமும் அஜ்மல் பேசியது தெரிய வந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அஜ்மலிடம் இருந்து விலக நினைக்கும்போது தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் பறித்துள்ளான். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது பெற்றோர்களிடம் நடந்த விஷயங்களை எல்லாம் கூறியுள்ளார். அவரது பெற்றோர்கள் தங்களது குடும்ப நண்பர்கள் மூலம் திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அஜ்மலை அழைத்து வந்து மண்ணடியில் ரஹ்மான் என்பவரின் அலுவலகத்தில் வைத்து பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 

அப்போது அஜ்மல் செல்போனில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை அழிக்க முயன்றபோது அவரது மொபைலில் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்கள் இருந்துள்ளன. பல பெண்களிடம் மோசடியில் அவன் ஈடுபட்டதை அறிந்து அவனை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அஜ்மல் மீது புகார் கொடுத்துள்ளனர். 

ஆனால் அவனை போலீசார் கைது செய்து விசாரிக்காமல் அவர் மீது மோசடி வழக்கு மட்டும் பதிவு செய்து அனுப்பி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேட்ரிமோனி மூலம் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை தேடி கண்டுபிடித்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களிடம் பழகி வருவதாகவும் அதற்கு ஆதாரமாக வாட்ஸ்அப் சாட் மற்றும் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை ஒப்படைத்த பிறகும் கூட அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கொடுத்தவர்கள் கூறுகின்றனர். அஜ்மலை விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.