ஒரு நாள் இரவு முழுவதும் உடன் இருக்கச் சொல்கிறார்கள்! நேரலை வீடியோவில் நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

தெலுங்கு திரையுலகில் பிரபல திரைப்பட நடிகையான ரேஷ்மி கவுதம் படுக்கைக்கு தன்னை ஒருவர் ஒரு இரவு முழுவதும் ஒன்றாக இருக்க அழைத்ததாக கூறியுள்ளார்.


நடிகை ரேஷ்மி கவுதம் தெலுங்கு திரை உலகில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் ஒரு நடிகை ஆவார். குண்டூர் டாக்கீஸ் மற்றும் ஜபர்தஸ்த் போன்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவர் பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில்  சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. நடிகை ரேஷ்மியை ஒரு நபர் தன்னுடன் ஒரு இரவு முழுவதும் இருக்குமாறு அழைத்ததாக  கூறியுள்ளார். 

இதனை எதிர்த்து மிகவும் தைரியமான கருத்துக்களுடன் இந்த  செய்தியை வெளியிட்ட வெளியிட்டுள்ளார் நடிகை ரேஷ்மி கவுதம். பாலியல் இன்பம் குறித்த பொருத்தமற்ற கேள்விகளால் பெண்கள் பெரிதும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறினார். இந்த செய்திகளை நடிகை ரேஷ்மி கவுதம் சமூகவலைத்தளத்தில் லைவ்வாக வந்து தெரிவித்தார். 

நடிகை தன்னைப் பற்றி மோசமான மற்றும் கேவலமான கருத்துக்களைக் கூறும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார்,  அதுமட்டுமில்லாமல் தன்னைப் பற்றி கேவலமாகப் பேசுபவர்களை  பற்றியும் தனக்கு கவலை இல்லை எனவும் கூறினார்.

ஆனால் பாலியல் துன்புறுத்தல்கலால்  அவதிப்படுகின்ற சிறுமிகளுக்காக நான் பேச வந்துள்ளேன் என்று ஆரம்பித்தார். ஒரு பையன் ஒரு சிறுமியைப் பார்த்து கேட்கிறான் உன்னோடு ஒரு இரவு நான் கழிக்க வேண்டும் என்று அதற்கு அந்த சிறுமி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போகிறாள்.

இந்த சமுதாயம் ஒரு பெண் கன்னித் தன்மையோடு இருக்கிறாள் என்று தான் பார்க்கிறது அதுவே ஒரு ஆணுக்கு கன்னித்தன்மை இருக்க வேண்டுமா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிக்க மறந்துவிடுகிறார்கள் என்று கூறினார்