மாமியார் கேட்ட ஒரே கேள்வி..! தூக்கில் தொங்கிய மருமகள்..! நேராக வந்த மகன் செய்த கொடூரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தை தாங்கமுடியாத கணவர் ஒருவர் தானும் தன்னுடைய குழந்தைகளுடன் இணைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(வயது 30) மற்றும் நிர்மலா(வயது 23) தம்பதியினர் . இவர்கள் இருவருக்கும் திருமணமாகி சஞ்சனா ஸ்ரீ (வயது 3)மற்றும் ரித்திகா ஸ்ரீ (வயது 1) என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

வெங்கடேசனுக்கு பெங்களூருவில் முதியவர் ஒருவருக்கு செவிலியராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் பெங்களூருவில் அந்த முதியவர் உடன் தங்கி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி அவருக்கு ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.

வெங்கடேசன் பெங்களூருவில் இருந்து வந்தாலும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் வெங்கடேசன் அவர்களின் பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேசனின் மனைவி நிர்மலா தன் மாமனார் மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் . இதனை அறிந்த வெங்கடேசன் பதறியடித்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

சடலமாக இருந்த தன்னுடைய மனைவியை பார்த்த வெங்கடேசன் சுக்குநூறாக நொறுங்கிப் போய் இருக்கிறார் . தன்னுடைய மனைவியின் உடலை கட்டிக்கொண்டு கதறி அழுதிருக்கிறார்.

 தன் மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தன் மனைவி இறந்த சோகத்தில் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வாலாஜாபேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு சென்னையிலிருந்து பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன்பு நின்றுள்ளார். அவரும் அவரது குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர் .ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் அடுத்தடுத்து பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.