3 பிள்ளைகள் இருக்காங்க என்று கூறி உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலி..! பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர நபர்! மேட்டூர் திகுதிகு!

சேலம் மாவட்டம் மேட்டூரில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்த ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


சேலம் மாவட்டம் மேட்டூரில் நங்கவள்ளி மசக்காளி ஊர் அமைந்துள்ளது. இங்கு பிரபல ரவுடி செந்தில்குமார் வசித்து வருகிறார். இவருக்கு வயது 39. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் வசித்து வரும் பகுதியில் இருக்கும் இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார்.

செந்தில் குமாருக்கும் கொளத்தூர் ஐயம்புதுரை பகுதியை சார்ந்த பார்வதி என்ற பெண்மணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்வதி தன் கணவரை இழந்து தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. நேற்றைய இரவு செந்தில்குமார், தன்னுடைய கள்ளக் காதலியான பார்வதி இல்லத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவருக்கும் பார்வதிக்கும் இடையே தகராறு நிகழ்ந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், பார்வதியின் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை கொண்டுவந்து அவர் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். தீ மளமளவென உடலில் பரவியதுடன் பார்வதி அலறி இருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உடனே அவர்கள் பார்வதியின் உடலில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்து அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை முடிந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்வதி, சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்து பார்வதியின் மூன்று குழந்தைகளும் தற்போது யாரும் இல்லாமல் உள்ளனர்.  

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் செந்தில் குமாரின் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.