புருசன் இருக்கும் போது உனக்கு அவன் கேட்குதா..! தங்கையை வெட்டி கூறு போட்ட அண்ண்..! மதுரை பயங்கரம்!

மதுரையில் தங்கையின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ள அந்தப் பெண்ணின் அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மதுரை மாவட்டம் மேலவளவை அடுத்து கீழப்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சகுந்தலா(வயது 26) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சேதுபதி (வயது 9) என்ற மகனும், காமாட்சி (வயது 7 ) என்ற மகளும் உள்ளனர். இந்த தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் சகுந்தலா தன்னுடைய அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தங்கி வந்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சகுந்தலா தன்னுடைய தாய் வீட்டில்தான் வசித்து வருகிறார்.

சகுந்தலாவிற்கு சௌந்தர பாண்டியன் (வயது 30) என்ற ஒரு அண்ணன் இருக்கிறான். தன் தாய் வீட்டு அருகில் இருக்கும் நபர் ஒருவருடன் சகுந்தலா நெருங்கி பழகி வந்துள்ளார். இதனை பற்றி சௌந்தரபாண்டியனுக்கு தெரிய வரவே தன்னுடைய தங்கையை கண்டித்துள்ளார். சௌந்திரபாண்டியன் எவ்வளவோ சொல்லியும் அவரது தங்கை சகுந்தலா தன்னுடைய நடவடிக்கையை சற்றும் கூட மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரபாண்டியன் இன்றைய தினம் காலை பொழுதில் தன்னுடைய தங்கையிடம் மீண்டும் சண்டையிட்டு இருக்கிறார்.

இன்று காலை நடைபெற்ற சண்டையில் ஆத்திரத்தில் செய்வதறியாது சௌந்தரபாண்டியன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அவரது தங்கையை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். அரிவாள் வெட்டு சரமாரியாக விழவே சகுந்தலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அருகிலிருந்த பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அறிந்த சௌந்திரபாண்டியன் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

தகவலறிந்த மேலூர் டி.எஸ்பி. சுபாஷ், மேலவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர். போலீசார் கொலை செய்யப்பட்ட சகுந்தலாவின் உடலை கைப்பற்றி அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் சகுந்தலாவை கொலை செய்த அவரது அண்ணன் சௌந்தரபாண்டியனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.