காதலியை கொலை செய்து இதயத்தை எடுத்து சமைத்து சாப்பிட்ட காதலன்! கேட்போர் குலை நடுங்க வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் சொந்த காதலியை காதலன் கொடூரமாகக் கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் இண்டியான பகுதியை சேர்ந்தவர் tammy. இவர் ஜோசப் என்ற நபரை காதலித்து வந்துள்ளார் இந்நிலையில் ஜோசப் கடந்தகாலத்தில் சிறைவாசம் அனுபவித்து இவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் எதற்காக சிறைக்கு சென்றார் என்ற காரணத்தை ஆராயும் பொழுது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று tammy க்கு கிடைத்தது. அதில் ஜோசப் தனது முன்னாள் மனைவி ஒருவரை வயிற்றில் குழந்தையுடன் சுமக்கும் பொழுது கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக சிறை சென்றது தெரிய வந்த நிலையில் தன் வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்லுமாறு ஜோசப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் tammy யை கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் பல நாட்களாக tammy அலுவலகங்களுக்கு வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றனர்.

அப்பொழுது tammy வீட்டு வாசலில் ஜோசப் ரத்தக்கரை படிந்த உடையுடனும் கூர்மையான கத்தி உடனும் நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட காவல்துறையினர் அவரை சுற்றி வளைக்க தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் டாமியின் மண்டை ஓட்டை பிளந்து அதில் உள்ள மூலையில் ஒரு பகுதியை பச்சையாகவும் நுரையீரல் இதயம் உள்ளிட்டவற்றை சமைத்து சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதில்கள் காவல்துறையில் உள்ள மூத்த அதிகாரிகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.