அவளால் எனக்கு கொரோனா வந்துவிட்டது..! அதனால் என் காதலியை..! போலீசாரை மிரள வைத்த காதலன்! என்னாச்சு தெரியுமா?

தன்னுடைய காதலி தனக்கு கொரோனா நோயை கொடுத்துவிட்டால் அதனால் நான் அவளை கொலை செய்து விட்டேன் என்று காதலன் போலீசாருக்கு போன் செய்து அதிர்ச்சியூட்டும் தகவலை கொடுத்துள்ளார்.


இத்தாலி மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் லோரினா கோரன்டா... 27 வயதாகும் இவர் 28 வயதாகும் அன்டோனியோ டீ பேஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் போலீசாருக்கு போன் செய்து தன் காதலியை கொன்று விட்டதாக காதலன் அன்டோனியோ கூறியுள்ளார். இதைக் கேட்டு பதறிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

போலீசார் வந்து பார்த்தபோது வீட்டில் லோரினா சடலமாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அன்டோனியோ தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனால் போலீசார் அன்டோனியோவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அவரது காதலியுடன் பணிபுரியும் சக மருத்துவர்களே அன்டோனியோவுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர்.

 பின்னர் போலீசார் ஏன் உனது காதலி லோரினாவை கொலை செய்து விட்டாய் என்று கேட்டதற்கு, அவள் எனக்கு கொரோனா வைரஸ் தொற்றை கொடுத்து விட்டாள். அதனால்தான் நான் அவளை கொலை செய்தேன் என அவளது காதலன் கூறினார்.ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் உயிரிழந்த அவரது காதலிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.