மனைவி செய்த தகாத செயல்! 200 அடி உயர டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்த கணவன்!

எத்தனை முறை கூறியும் மனைவி கேட்காத காரணத்தினால் 200 அடி உயர மின் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், கிரிஜா – ஆர்யா எனும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 

ரமேஷ் சென்னையில் தங்கி சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலைல் கடந்த மாதம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ரமேஷ் திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி கீதா குறித்து உறவினர்கள் சில தகவல்களை கூறியுள்ளனர்.

 

இது குறித்து ரமேசும் விசாரித்த போது மனைவி கீதாவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபருடன் முன்னரே பழகிய கீதா பின்னர் கணவர் கண்டித்த உடன் அந்த தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கணவர் சென்னைக்கு சென்றுவிட மனைவி கீதாவுக்கு மீண்டும் அந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார் ரமேஷ். ஆனால் இனி தான் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று மனைவி உறுதி அளித்துள்ளார்.

 

இருந்தாலும் மனைவி மீது நம்பிக்கை இழந்த கணவன் ரமேஷ் திருவண்ணாமலையிலேயே வேலை தேடிக் கொள்ள முடிவு செய்துள்ளார். மீண்டும் சென்னை சென்றால் மனைவி அந்த இளைஞருடன் பழக நேரிடும் என்று அஞ்சியுள்ளார்.

 

ஆனால் மனைவி கீதாவோ கணவனை சென்னைக்கு வேலைக்கு செல்லும் படி கூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவதாத்தை தொடர்ந்து கோபப்பட்ட ரமேஷ் நேராக தனது வீட்டிற்கு அருகே உள்ள 200 அடி உயர மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.

 

அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ரமேஷ் மிரட்டினார். இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு வந்து ரமேசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரமேஷின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு தனது கணவரிடம் பேசினார்.

 

இனி தான் தவறு செய்யமாட்டேன் என்றும் வேறு எங்காது சென்றுவிடலாம் என்றும் மனைவி கூறினார். இதே போல் ரமேஷின் மகன் ஆர்யாவும், தந்தையை தயவு செய்து கீழே இறங்கி வந்துவிடுமாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

 

ஆனால் இதனை ஏற்று ரமேஷ் கீழே இறங்க மறுத்தார். இதனால் தீயணைப்பு வீரர்களும் வேறு சிலரும் மேலே ஏறி ரமேசை கிழே இறக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் மேலே ஏறிய நிலையில் தன்னை அவர்கள் நெருங்கிய உடன் திடீரென அங்கிருந்து ரமேஷ் குதித்தார்.

 

200 அடி உயர மின் கோபுரத்தில் இருந்து கீழே குதித்த போது அவரை தாங்கிக் கொள்ள சிலர் தார்ப்பாய்களை பிடித்திருந்தனர். ஆனால் ரமேஷ் வந்த வேகத்தை பார்த்த அவர்கள் தார்ப்பாய்களை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

 

இதனால் தரையில் விழுந்த ரமேஷ் உடல் சிதறி உயிரிழந்தார். ரமேஷ் தற்கொலைக்கு மனைவி தான் காரணம் என்று உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.