அவசர உதவி எண்ணை அழைத்து சமோசா கேட்ட நபர்..! உடனடியாக அவர் வீட்டுக்கு அதை அனுப்பி வைத்த கலெக்டர்! ஆனால் ஒரு ட்விஸ்ட்!

உத்திரபிரதேசத்தில் ஒருவர் தனக்கு நான்கு சமோசா வேண்டும் என அவசர உதவி எண்ணை அழைத்து தொல்லை செய்ததை அடுத்து அந்த மாவட்டத்தின் கலெக்டர் அவரது இல்லத்திற்கு சமோசாவை அனுப்பி வைத்தது மட்டுமல்லாமல் அவரை கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டு இருக்கிறார்.


உத்தரபிரதேச மாநிலத்தில் ராம்பூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மையால் பொதுமக்களுக்கு தேவையான அவசர காலங்களில் தங்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெற்றுக் கொள்ளவும் அவசர உதவி எண்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் இந்த அவசர எண்ணிற்கு போன் செய்து தனக்கு உடனடியாக 4 சமோசாக்கள் வேண்டும் எனவும் அதனை தன்னுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்திருக்கிறார். இதனைப் பற்றி அறிந்துகொண்ட அந்த மாவட்டத்தின் கலெக்டர் அந்த நபருக்கு சரியான பாடம் கற்றுத்தர முடிவெடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து அவரது இல்லத்திற்கு வழங்கப்பட்டதோடு அவரை கழிவுநீர்க் கால்வாய்களை தூய்மைப்படுத்தும்மாறு அதிரடியாக உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 இதனைப் பற்றிய மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது , கொரோனா பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் இந்நிலையில் மக்களின் அவசர காலங்களில் உபயோகப்படுத்துவதற்காக தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தினால் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது முறையானதல்ல வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.