உல்லாசத்துக்கு வர மறுத்த இளம் கள்ளக்காதலி! தீக்குளித்து செத்த இளைஞர்!

கல்லூரி மாணவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த இளைஞர், அவர் உல்லாசமாக இருக்க வராத காரணத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டான்.


இரணியல் அருகே உள்ள திங்கள்நகர் ஆற்றங்கரையை சேர்ந்தவர் பிரதீப் (வயது 29). மினி பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்த இவருக்கு, சுனிபிரியா (25) என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்த பிரதீப்புக்கு, காதல் ஆசை விடவில்லை.

 

   இந்நிலையில், இவர் டிரைவராகச் செல்லும் மினி பஸ்சில் தினசரி பயணித்த கல்லூரி மாணவியை காதலிக்க தொடங்கியுள்ளார். முதலில், அந்த மாணவிக்கு, பிரதீப் திருமணமானவர் என்ற விவரம் தெரியவில்லை. இதனால், அவரும், பிரதீப் உடன் நெருங்கிப் பழக தொடங்கியுள்ளார்.

 

   ஒருகட்டத்தில், பிரதீப் திருமணமான நபர், என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, படிப்படியாக அவரிடம் பழகுவதையும் நிறுத்திவிட்டார். எனினும், பிரதீப், அந்த மாணவியை துரத்தி துரத்தி லவ் டார்ச்சர் செய்துள்ளார். திருமணம் செய்யவும் பிரதீப் வலியுறுத்தவே, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

   ஆனாலும் தொந்தரவு தாங்காமல் அவ்வப்போது பிரதீப்புடன் வெளியே சென்று வந்துள்ளார் மாணவி. இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளது.

 

   இதனால், ஆத்திரமடைந்த பிரதீப், குறிப்பிட்ட மாணவியை சராமரியாக தாக்கியுள்ளார். இதன்பேரில், பிரதீப் மீது பாதிக்கப்பட்ட மாணவி குளச்சல் போலீசில் புகார் அளித்தார்.  புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், டிரைவர் பிரதீப்பை நேரில் அழைத்து, கண்டித்துள்ளனர். ஆனாலும், மாணவியை மறக்க முடியாத பிரதீப், தன் மனைவி, குழந்தையை மறந்து, அவர் மேல் பைத்தியமாக திரிந்துள்ளார்.     

 

   இப்படியே காதல் வெறியேறிய பிரதீப், தக்கலை அருகே உள்ள, மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார். அவரிடம் பேச முயற்சித்துள்ளார். மேலும் தான் அழைக்கும் போது தன்னுடன் வர வேண்டும் என்று மிரட்டியுள்ளான். ஆனால், மாணவியின் குடும்பத்தினர் பிரதீப்பை கண்டித்துள்ளனர். இதையடுத்து, விரக்தியடைந்த டிரைவர் பிரதீப், அங்கேயே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்தார். 

 

   இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், பிரதீப்பை, அருகில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

   காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் மத்தியில் இளம் கள்ளக்காதலிக்காக பிரதீப் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான். இதனால் அவனது மனைவியும், குழந்தையும் தான் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர்.