நடுரோட்டில் மயங்கி சுருண்டு விழுந்த சுகாதாரப்பணியாளர்..! யாரும் கண்டுகொள்ள பரிதாபம்..! கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டவருக்கு ஏற்பட்ட விபரீதம்!

மத்திய பிரதேசத்தில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வந்த சுகாதார பணியாளர் ஒருவர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் நடு ரோட்டில் மயங்கி சுருண்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் பல சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்வதற்காக வந்த சுகாதார பணியாளர் தான் பிரஜபதி. இவர் பிஎம்சி மையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

கிட்டத்தட்ட அரைமணி நேரமாக யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் அந்த நபர் அங்கேயே மயங்கி விழுந்து கிடந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த நபர் சுமார் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பயணம் செய்து மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்படியாக செல்லும்பொழுது தான் சாலையோரத்தில் மயக்க நிலையை அடைந்து கிடந்துள்ளார் பிரஜபதி. அதாவது 108 ஆம்புலன்சில் ஓட்டுநருடன் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார் பிரஜபதி. அப்படியாக வரும்பொழுது தான் நேற்று பிற்பகல் 2 மணியளவில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

அவர் மயங்கி கிடந்ததை பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிஎம்சி மருத்துவமனையில் அவரை அமைத்துக் கொள்ளுமாறு மன்றாடி இருக்கிறார். இருப்பினும் அவர்கள் அவரை அனுமதிக்க மறுத்ததால் அந்த ஓட்டுனர் அருகிலிருந்த வேறோரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அந்த மருத்துவமனையில் மயங்கி கிடந்த பிரஜபதிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.