என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டான்..! 22 வயசு பொன்னை கூட்டிட்டு வந்து கூத்தடிக்கிறான்..! கணவன் மீது 2 குழந்தைகளின் தாய் பகீர் புகார்!

கன்னியாகுமரியில் வசித்துவரும் ஒருவர் தான் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை விட்டுவிட்டு ஃபேஸ்புக் மூலம் பழக்கமான வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு  பகுதியில் வசித்து வருபவர் ரூபஸ் ஜெரால்ட். ரூபஸ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக காட்டாத்துறை என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை உயிருக்குயிராக காதலித்து வந்தார். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் வெகு விமர்சையாக இவர்களது திருமணம் நடைபெற்றது .

திருமணத்திற்கு வரதட்சணையாக பெண் வீட்டாரிடமிருந்து 101 சவரன் நகையும் 10 லட்சம் ரொக்கத்தையும் பெற்றுக் கொண்டார். இவர்கள் திருமண பந்தத்திற்கு சான்றாக அழகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

பிஸியாக சென்று கொண்டு இருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென திருப்புமுனை ஒன்று ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே ரூபஸ்ஸுக்கு முகநூலில் நட்பு வட்டாரம் அதிகம் எப்போதுமே முகநூலில் பிஸியாக இருக்கும் அவருக்கு புதிதாக பெண் ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார். 

முதலில் நட்பாக ஆரம்பிக்கப்பட்ட இவர்களது உறவு பின்னர் காதலில் முடிந்துள்ளது.

முகநூலில் பழக்கமான அந்த பெண்ணை ரூபஸ் தீவிரமாக காதலித்து வந்துள்ளார். காதல் மோகத்தில் தன் மனைவியி நகை மற்றும் பணம் ஆகிய அனைத்தையும் அந்த பெண்ணிடம் ரூபஸ் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தை பற்றி அறிந்த ரூபஸின் மனைவி மிகவும் கோபமடைந்து தன் கணவரிடம் நியாயத்தை கேட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ரூபஸ் தன் மனைவியை அடித்து அவருடைய பெற்றோர் இல்லத்திற்கு துரத்தி இருக்கிறார். வீட்டை விட்டு தன் மனைவியை தொடங்கியவுடன் ரூபஸ் தன்னுடைய பேஸ்புக் காதலியை தன் வீட்டிற்கே கொண்டுவந்து குடும்பம் நடத்தி இருக்கிறார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ரூபஸின் மனைவிக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது மனைவி வீட்டு பெரியவர்களுடன் பஞ்சாயத்து பேசுவதற்காக வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் பெரியவர்கள் அனைவரும் பேசியது பசை தன் முகநூல் காதலியிடம் இருந்து விலகி விடுமாறும் கூறியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஒருவரும் அவரது மனைவியும் சமாதானப்படுத்தி ஒன்றாக சேர்த்து வைத்துள்ளனர்.

என்னதான் மனைவியுடன் ரூபஸ் வாழ ஆரம்பித்தாலும் அவரது பேஸ்புக் காதலியை கை விட மனம் வரவில்லை . அதனால் மூலசெல் பகுதியில் தனியாக வீடு ஒன்றை எடுத்து அதில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஃபேஸ்புக் காதலியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனைப்பற்றி ரூபஸ் என் மனைவிக்கு தெரியவந்தவுடன் அருகில் இருந்த காவல் நிலையத்தில் சென்று தன் கணவர் மீது புகார் அளித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ரூபஸ் தன்னுடன் 20க்கும் மேற்பட்ட கூலிப்படை ஆட்களை கொண்டு அழைத்து வந்து தன் மனைவியை மிரட்டி இருக்கிறார். மேலும் வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை எடுத்துச் சென்றிருக்கிறார் அதுமட்டுமில்லாம வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து நாசம் செய்திருக்கிறார்கள்.

இதனைப் பற்றி தகவல் அறிந்த போலீசார் ரூபத்தை வலைவீசி தேடி வருகின்றனர் மேலும் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடிய விரைவில் ரூபத்தை கைது செய்து விடுவோம் எனவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.