என்ன தான் கட்டிய மனைவியாக இருந்தாலும் பட்டப்பகலில் இப்படியா? கணவன் செய்த பகீர் செயல்! வைரலான வீடியோ!

கணவர் ஒருவர் தன்னுடைய சொந்த மனைவியை பட்டப்பகலில் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.


உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதலிலேயே பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கணவன் மனைவிக்கு இடையே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருவது தொடர்ச்சியாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ பதிவில் கணவர் ஒருவர் தன்னுடைய சொந்த மனைவி என்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்குகிறார். மேலும் அவர் தனது மனைவியை அடிக்கும் பொழுது ஒன்றுமே தெரியாத அவரது குழந்தை கதறுவது நமது கண்களிலும் கண்ணீர் வர வைக்கும் இடமாக அமைந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆன போதிலும் வீடியோவில் இருப்பது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த வீடியோ பதிவு குறித்து போலீசார் தரப்பில் இந்த வீடியோ பதிவில் இருப்பது யார் என்று கண்டுபிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த வைரஸின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் தங்களுடைய வேலைகளுக்கு செல்லும்பொழுது இம்மாதிரியான சம்பவங்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வீடியோ பதிவானது இணைய தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.