சென்னையில் கட்டு கட்டாக சாலையில் வீசப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்! அதிர வைக்கும் காரணம்!

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்றையதினம் சுமார் நள்ளிரவு 12.30, மணியளவில் போலீசார் எப்போதும் போல ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சந்தேகம் படும்படி அங்கு சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தும் படி கூறியிருக்கின்றனர்.  

போலீசார் கூறியதை கேட்டும் தன்னுடைய  இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்று உள்ளார் அந்த  மர்ம ஆசாமி. இதன் மூலம் போலிஸாரின் சந்தேகம் வலுப்பெற்றது. இதனையடுத்து அந்த நபரை விடாமல் போலீசார் துரத்தி சென்றனர்.

போலீசார் தன்னை விடாமல் துரத்துவதால் அச்சம் அடைந்த அந்த மர்ம நபர், தான் வாகனத்தில் வைத்திருந்த 3 பைகளை தூரமாக வீசி எறிந்து உள்ளார். இதன் பின்னர் போலீசார், அந்த நபர் வீசி எறிந்த பைகளை கைப்பற்றுவதற்காக தங்களுடைய வாகனத்தில் இருந்து கீழ் இறங்கி உள்ளனர். 

அப்போது அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்தது.  இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸ் அதிகாரிகள் இந்த பணத்தை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.

இந்த பைகளை திறந்து பார்க்கும் வேளையில் அந்த மர்ம நபர்,  சம்பவ இடத்தை விட்டு தப்பிவிட்டார்.  தற்போது போலீசார் அந்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.