5 வருடம்..! 1000 ஆண்கள்! ப்ரியானு நினைத்து பேசிய பாய் பெஸ்டிக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெண்களின் குரலில் பேசி ஆண்களை ஆபாச வலையில் சிக்க வைத்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னையிலுள்ள மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட புகார்கள் ஆன்லைன் மூலமாக பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட பொழுது இந்த புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் இதனை அளிக்கவில்லை என திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இந்நிலையில் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஒருவரின் சொந்த காரருக்கும் இதே போல் உள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணைக்காக காவல் துறை உதவி ஆய்வாளரின் உறவினரான பொன்ராஜ் அதிகாரிகள் அழைத்துள்ளனர் . பொன்ராஜ் தனக்கு நிகழ்ந்ததை பற்றி விரிவாக போலீசாரிடம் கூறியிருக்கிறார்.

அப்போது பொன்ராஜ் லோக்நெக்டோ  என்ற செயலில் பதிவு செய்திருக்கிறார். பதிவு செய்தவுடன் ஆபாசமாக உரையாடலாம் என்று பிரியா என்ற பெண் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். இதற்காக கட்டணம் ரூபாய் 100 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொன்ராஜ் ரூபாய் 100 அந்த செயலிக்கு செலுத்தியிருக்கிறார். இதற்குப் பின்பு ரூபாய். 1500 எழுப்பினால் ப்ரியா என்ற பெண்ணின் நிர்வாணப் படங்களை பார்க்க இயலும் என்று மீண்டும் ஒரு செய்தி வந்துள்ளது. இதனையடுத்து பொன்ராஜ் ரூபாய். 1500 செயலியில் செலுத்தியிருக்கிறார்.

பணத்தை அனுப்பியவுடன் அந்த செயலிலிருந்து உங்கள் மீது போலீசில் புகார் வழங்கப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த பொன்ராஜ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் செய்வதறியாது திகைத்துப் போய் இருக்கிறார்.

பின்னர் பொன்ராஜ் இடமிருந்து தேவையான அனைத்து தகவல்களையும் செல்போன் எண்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் அந்த செல்போன் எண்ணை வைத்து திருநெல்வேலிக்கு ஒரு தனிப்படை காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர் அப்போது ப்ரியா என்ற பெண்ணை பிடிப்பதற்காக சென்ற அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியமும் அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது.

அதாவது பிரியா என்ற பெண்ணுடைய பெயரை பயன்படுத்தி ராஜ்குமார் ரீகன் என்னும் இளைஞர் பெண் குரலில் பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர் விசாரணையின் போது அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் மற்ற தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டன.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம் பெற்றிருந்தன. பின்னர் அவரை விசாரித்தபோது உள்ளூர் ஆண்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டை சேர்ந்த பல ஆண்களையும் பெண் குரலில் பேசி மயக்கி அவர்களிடமிருந்து பணம் பறித்ததாக ராஜ்குமார் ரீகன் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் சொந்தமாக வீடு, கார் ஆகியவற்றையும் ராஜ்குமார் ரீகன் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.