வெளிநாட்டில் வேலைக்கு சென்ற மனைவி! பள்ளித் தோழியுடன் பழக்கம் ஏற்படுத்தி பணம் பறித்த கணவன்! பிறகு நேர்ந்த விபரீதம்!

இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளித் தோழியுடன் பழகி திருமண மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோயம்புத்தூரில் உள்ள புதூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரேவதி. இவர் தற்போது ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  ரேவதி தன்னுடைய கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் இவரது கணவருக்கும் விவாகரத்து வழக்கு நடைபெறுவதை தன்னுடைய பெற்றோர் கண்டித்ததால் அவர்களை விட்டு விலகி தனிமையில் வசித்து வருகிறார் ரேவதி.

இதனையடுத்து ரேவதி ஜவுளி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார் .ஆனால் அதில் போதிய வருமானம் இல்லாததாலும்  பெரிய நஷ்டத்தை சந்தித்ததாலும் அதனை மூடி விட்டு தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . 

ரேவதி எப்போதுமே  சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு பெண்மணி. சமீபத்தில் ரேவதிக்கு தன்னுடைய பள்ளிப் பருவம் நண்பர் 15 ஆண்டுகாலம் கழித்து இன்ஸ்டாகிராமில் கனெக்ட் ஆகியுள்ளார். அந்த நண்பரின் பெயர் ஜிதின்ஷா. 

தனிமையில் வாடிய ரேவதிக்கு ஜிதின்ஷாவின் அன்பும் ஆதரவும் பெரிய ஆறுதலை தேடித் தந்திருக்கிறது. இந்த பழக்கத்தை  தவறாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி எடுத்திருக்கிறார் ஜிதின்ஷா.

ஆகையால் இவர் ரேவதிக்கு நல்லவர் போல் நட்பு பாராட்டி அவரிடம் ஆசை வார்த்தைகள் காட்டி அவரை தன்வசப்படுத்தி இருக்கிறார்.  ஜிதின்ஷாவின் அன்பு உண்மையானது என நம்பி ரேவதியும்  அவரோடு வாழ ஆரம்பித்துள்ளார். 

இதற்கு முன்பு திருமணமானதை மறைத்து ரேவதியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ரேவதி பலமுறை அவரை  திருமணம் செய்து கொள்ள அழைத்த போது அதனை மறுத்து வந்துள்ளார். இப்படியாக நாட்கள் மெல்ல மெல்ல நகர நகர ஜிதின்ஷா  ரேவதியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி  கொஞ்சம் கொஞ்சமாக  7 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். 

இந்நிலையில் ரேவதிக்கு, அமெரிக்காவில் வசித்து வரும்  சின்னுஜேக்கப் என்பவர் முகநூல் மூலம் பழக்கம் ஆகி உள்ளார் . சிறிது நாட்களுக்குப் பின்பு சின்னுஜேக்கப் தான் ஜிதின்ஷாஷாவின் முதல் மனைவி என்பது ரேவதிக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சின்னுஜேக்கப் ஜிதின்ஷாவைப் பற்றிய பல திடுக்கிடும்  உண்மைகளை ரேவதிக்கு கூறியுள்ளார். ஜிதின்ஷா இதற்கு முன் ஒரு பெண்ணை ஏமாற்றி 30 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்  என்பதை சின்னு ஜேக்கப் ரேவதியிடம் கூறியுள்ளார் . 

இதனைக் கேட்ட ரேவதி மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார் . ஜிதின்ஷாவை நம்பி தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைத்தது தன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறாக எண்ணி உள்ளார். 

பின்னர் ரேவதி, ஜிதின்ஷா உடன் சண்டையிட்டுள்ளார்.  ஜிதின்ஷா பற்றி போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் கூறியுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த ரேவதியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். தன்னைப் பற்றிய அனைத்து உண்மைகளும் ரேவதிக்கு தெரியவந்துள்ளதால் ஜிதின்ஷா  வெளிநாட்டுக்கு தப்பித்து விடலாம் என்று திட்டமிட்டு இருந்திருக்கிறார் . 

 இதன்படி ஆலப்புழாவில் இருந்து துபாய் செல்ல திட்டமிட்டிருந்த ஜிதின்ஷாவை மதுரைகரை  போலீசார் பேருந்தில் வைத்து பிடித்துள்ளனர். சமூக வலைத்தளத்தின் மூலம் யாரென்று தெரியாத ஒருவருடன் பழக்கம் வைத்துக் கொண்டாள் இதுதான் இறுதியில் நடைபெறும்  என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் .