தேனி மாவட்டம் கம்பம் அருகே இளைஞர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியின் மூன்றரை வயது சிறுமியை கடித்து துன்புறுத்தியதால் போலீசார் கைது செய்துள்ளனர்.
உல்லாசத்துக்கு வர மறுத்த 2வது மனைவி..! மூன்றரை வயது மகளை கடித்து வெறியை தீர்த்த கொடூர கணவன்..! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

தேனி மாவட்டம் கம்பம் அருகே தாத்தப்பன் குளத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் சிங்கராஜா. கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வாழும் பர்கத் நிஷா என்பவருடன் சிங்கராஜாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிங்கராஜா அந்த பெண்மணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப சண்டையால் சிங்கராஜா தனது இரண்டாவது மனைவியான பர்கத் நிஷாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது பர்கத் நிஷாவின் மூன்றரை வயது சிறுமியையும் கடித்து சித்திரவதை செய்துள்ளான். அவர்கள் இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் இருந்த தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிங்கராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.