பைக்கில் லிப்ட் கொடுக்க மறுத்தவர் காது அறுப்பு! கொடூர கொலை! வேலூர் பயங்கரம்!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு கொடுக்க மறுத்த இருசக்கர வாகன ஓட்டுநரை இருவர் கத்தியால் குத்தியும் அவரது காதை அறுத்தும் பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாள் என்பதால் குடும்பத்துடன் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். நிகழ்ச்சியை தொடங்கி சிறிது நேரம் ஆன நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக பால் மற்றும் தயிர் வாங்க அருகில் உள்ள கடைக்கு புறப்பட்டுள்ளார்.

பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி வரும் வழியில் இரு நபர்கள் குடிபோதையில்  அந்த வழியே வரும் வாகன ஓட்டுனர்களிடம் லிப்ட் கேட்டு கொண்டுள்ளனர். எந்த வாகனமும் நிற்காமல் சென்று வந்துள்ளது . இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தங்களை இருசக்கர வாகனத்தில் மின்னல் கிராமம் அழைத்துச் சென்று இறக்கிவிடும்படி தட்சிணாமூர்த்தியை கேட்டுள்ளனர்.

பின்னர் தான் ஒரு அவசர வேலையாக செல்ல வேண்டியுள்ளது அதனால் உங்களை அழைத்துச் செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார் தட்சிணா மூர்த்தி. இதையடுத்து ஆத்திரமடைந்த இருவர் தட்சணாமூர்த்தியை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், காதை அறுத்தும், தலை மீது கல்லை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  இருந்த தட்சிணாமூர்த்தியை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தட்சிணாமூர்த்தி உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் அறிந்த கிராம மக்கள் மற்றும் தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள் அன்வர்த்திகான்பேட்டை பகுதியில் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலையில் அமர்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.