நம்மை ஒன்னா சேர்ந்து வாழவிடமாட்டாங்க..! கள்ளக்காதலியுடன் சேர்ந்து விஷம் குடித்த ரமேஷ்..! 7 மாத ஆண் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

திருச்சி அருகே ஆற்றங்கரை ஓரத்தில் இருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31) இவர் காவியா (வயது 23 ) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . ரமேஷ் அந்தப்பகுதியில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 7 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 

சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் திடீரென்று மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது ரமேஷ் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பொழுது அவருக்கு ரீனா (வயது 18) பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி ஆற்றங்கரை ஓரமாக ரமேஷ் மற்றும் ரீனா ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அதாவது ரீனா தன்னுடைய கல்லூரிப் படிப்பை பயின்று ஆகும் வருகிறார் . இந்நிலையில் தினம்தோறும் கால் டாக்சி டிரைவரான ரமேஷின் காரில் தான் கல்லூரிக்கு சென்று வருவதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியிருக்கிறது.


இந்நிலையில் ரீனாவும் ரமேஷும் இணைந்து காவிரி ஆற்றங்கரைக்கு சென்றிருக்கின்றனர். வெகுநேரமாக ரமேஷ் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து விளையாடியிருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் ரமேஷும் ரீணாவும் அங்கு கரையோரத்தில் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்துள்ளார். 

மேலும் அவர்களுக்கு உடல்களுக்கு அருகில் விஷ பாட்டிலும் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருவரும் வாழ்க்கையில் இணைய முடியாத சோகத்தில் இந்த தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.