அமெரிக்காவில் உயிரியல் பூங்கா ஒன்றில் வேடிக்கை பார்க்க வந்த 3 வயது குழந்தையை சிங்கம் ஒன்று கவ்விச்சென்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
கண் முன்னே குழந்தையின் கழுத்தை கவ்வி இழுத்துச் சென்ற சிங்கம்..! காப்பாற்ற தந்தை செய்த பகீர் செயல்! பதைபதைப்பு வீடியோ உள்ளே!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ளது ஒயிட்டிங் ரேஞ்ச் என்ற வன உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் நேற்று முன்தினம் ஒரு தம்பதி தங்களது 3 வயது குழந்தையுடன் விலங்குகளை கண்டு ரசித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கே வந்த சிங்கம் அந்த தம்பதி வைத்திருந்த 3 வயது ஆண் குழந்தையின் கழுத்தை கவ்வித் தூக்கிச் சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை சற்றும் எதிர்பாராமல் தனது கையில் இருந்து உடமைகள் அடங்கிய பை சிங்கத்தின் மீது தூக்கி எறிந்தார். இதையடுத்து அந்த குழந்தையை கீழே விட்டுவிட்டு கைப்பையை தூக்கிச் சென்றது அந்த மலைச்சிங்கம். பின்னர் அங்கிருந்து தப்பி ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டது.
பின்னர் மீட்கப்பட்ட குழந்தைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தை அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த மலைச்சிங்கத்துக்கு மயக்க ஊசி செலுத்திய வனக் காவலர்கள் அதை மீண்டும் கூண்டில் அடைத்தனர்.
சிங்கம் மரத்தின் மீது நின்றுகொண்டு வாயில் பையுடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்து செல்பி எடுக்க முயன்றவர் அந்த சிங்கத்திடமே சிக்கி சின்னாபின்னாமானார் என்பது குறிப்பிடத்தக்கது.