சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து பொருட்களை அடுத்தடுத்து நாக்கால் நக்கிய பெண்..! கொரோனாக்காரியா என பீதி!

கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை தனது நாக்கால் நக்கியதால் கொரோனா பீதியால் போலீசார் அவரை கைது செய்தனர்.


அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் நுழைந்து அங்குள்ள பொருட்களை எடுத்து அதனை தன் நாக்கினால் நக்க ஆரம்பித்து இருக்கிறார். இதனால் அங்கிருந்தவர்கள் பீதி அடைந்திருக்கின்றனர்.

ஏற்கனவே உலகம் முழுவதும் கொரோனா பீதியில் இருக்கும் நிலையில் இந்த பெண்ணின் செய்கை அவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உடனே அந்த கடையின் உரிமையாளர் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து இருக்கிறார். போலீசார் அங்கு வந்து பார்த்த பொழுது அந்தப் பெண் கடையில் வைக்கப்பட்டிருந்த நகைகளை எடுத்து அதனை தன் நாவினால் நக்கி இருக்கிறார்.

இதைப் பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் சென்று விசாரணை செய்திருக்கின்றனர். விசாரணையின் பொழுது அந்தப் பெண்ணின் பெயர் ஜெனிஃபர் வாக்கர் என்றும் அவருக்கு வயது 53 என்றும் தெரியவந்தது. அந்தப் பெண் அந்தக் கடையில் இருந்த 1800 டாலர் மதிப்புள்ள பல பொருட்களை எடுத்து தன்னுடைய கார்டில் சேமித்து இருந்திருக்கிறார்.

அந்த பெண் வைத்திருந்த கார்ட்டில் மதுபானங்கள் மற்றும் இறைச்சி போன்ற பல பொருட்கள் இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த பெண் அந்த பொருட்களை வாங்குவதற்காக அந்த கடைக்குள் நுழைய வில்லை என்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர் .அந்தப் பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.