31 வயது ஆனந்திக்கு 17 வயது பிளஸ் ஒன் மாணவனுடன் தகாத உறவு..! கண்டுபிடித்த கணவன்..! பிறகு அரங்கேறிய பகீர் சம்பம்!

மகன் வயதுள்ள சிறுவனிடம் கள்ளத் தொடர்பில் இருந்ததைக் கண்டித்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூரில் சிவக்குமார், ஆனந்தி(வயது 31)  தம்பதி வசித்து வருகின்றனர். சிவக்குமார் ஒரு கூலித் தொழிலாளி இந்த தம்பதிக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 8 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையே ஆனந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவனுக்கும் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் கணவர் சிவக்குமார் மனைவியை கண்டித்துள்ளார்.

இந்த விஷயம் சிறுவனின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் குடும்பத்தினர் சிவகுமார் வீட்டிற்கு வந்து ஆனந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி உள்ளனர். தகவல் அறிந்து வந்த கணவர், மீண்டும் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி வீட்டின் பின்பக்கம் உள்ள தோட்டத்திற்கு சென்று மரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து மனைவியை தேடிய சிவக்குமார் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவம் குறித்து நடுக்காவேரி காவல்நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஆனந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முறையற்ற உறவில் ஈடுபட்ட சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.