ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்! ஆனால் 2 பெண்குழந்தைகளுக்கு ஏற்பட்ட விபரீதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மத்திய பிரதேசத்தில் ஷியோபூர்  என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்திருக்கிறது இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அந்த கர்ப்பிணிப் பெண் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்து இருக்கிறார். அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஆவர். இந்த பெண்ணிற்கான பிரசவம் சுமார் 35 நிமிடங்களுக்கு நீடித்தது ஆக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்தப் பெண் தன்னுடைய இருபத்தி எட்டாவது வாரத்தில் பிரசவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் 6 குழந்தைகள் என்பதால் எல்லா குழந்தைகளுமே மிகவும் எடை குறைந்து பிறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர் . ஆகையால் அந்த பெண்ணின் இரண்டு பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் மற்ற நான்கு ஆண் குழந்தைகளும் எடை குறைவாக இருப்பதால் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்குத் தேவையான எல்லா சிகிச்சைகளும் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியிருக்கிறார் மேலும் அந்தப்பெண் நல்லமுறையில் உடல்நிலை தேறி உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.