கூலிக்கு ஆள் பிடித்து நள்ளிரவில் மனைவியிடம் அனுப்பி வைத்த கணவன்! மதுரை சம்பவம்!

மதுரையில் மனைவியிடமிருந்து சொத்துக்களை பெற வேண்டும் என்பதற்காக 11 லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி விட்டு கணவன் தன்னுடைய மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு பாரதி உலா வீதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவர் முதலில் லட்சுமிபுரத்தில் பாத்திர கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் லாவண்யா (வயது 33). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பாரதி உலா பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லாவண்யாவை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டி கொலை செய்தது.

இதனையடுத்து அந்த பகுதி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் . விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. லாவண்யா கொலை செய்யப்பட்ட அன்று நள்ளிரவில் அவரது வீட்டின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமில்லாமல் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களும் செயல்படாமல் இருந்தது. இவைதான் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது . இதனை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தங்களுடைய விசாரணையை துவங்கி இருக்கின்றனர் .அதன் பலனாக போலீசார் உண்மையான குற்றவாளியை தற்போது கண்டறிந்து இருக்கின்றனர்.

முதலில் போலீசார் லாவண்யாவின் கணவரான குமரகுருவை விசாரணை செய்ய துவங்கினர். விசாரணையின்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதாவது போலீஸ் விசாரித்த பொழுது குமரகுரு முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியிருக்கிறார் . இது அவர்களுக்கு குமரகுரு மீது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

போலீசாரின் கிடுக்கிப்பிடி தாங்க முடியாமல் குமரகுரு, கூலிப்படையை ஏவி தன்னுடைய மனைவியை சொத்துக்காக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதாவது மதுரையில் உள்ள லட்சுமிபுரத்தில் குமரகுரு பாத்திர கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பொதுவாகவே ஆடம்பரமாக வாழ்வது மிகவும் பிடிக்கும் . ஆகையால் பணத்தை கண்டபடி செலவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் குமரகுருவின் தந்தை மாரியப்பன் தன்னுடைய மகனின் இந்த செயல் பிடிக்காததால் மருமகள் லாவண்யாவின் பெயரில் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்திருக்கிறார் . இதனால் குமரகுரு மிகவும் ஆத்திரம் அடைந்திருக்கிறார் .தன் மனைவியிடம் பல முறை அந்த சொத்து தன் பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டு இருக்கிறார் . ஆனால் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவள் மீது மிகுந்த கோபம் உண்டாகி உள்ளது . இந்த கோபமே குமரகுரு வை கொலை செய்யும் நோக்கில் சிந்திக்க வைத்துள்ளது.

ஒரு குமரகுரு தன் மனைவியை எவ்வாறு கொலை செய்வது என்று யோசித்த நிலையில் அவருடைய நண்பர் அலெக்ஸ் என்பவரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே அலெக்ஸ் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் , சூர்யா ஆகிய இருவரையும் கூட்டாளியாக கொண்டு இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். பின்னர் இந்த கொலை செய்வதற்கான பணமும் பேரமாக பேசப்பட்டது குமரகுரு இதற்காக அவர்களுக்கு சுமார் ரூபாய் 11 லட்சத்தை தருவதாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து சூர்யா மற்றும் மோகன் ஆகிய இருவரும் இணைந்து லாவண்யாவின் வீட்டில் நள்ளிரவில் நுழைந்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதனால் லாவண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். இதனை குமரகுரு தன்னுடைய வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து போலீசார் குமரகுரு மற்றும் மூக்கன் மற்றும் சூர்யா ஆகிய நால்வரும் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.