பிரபல நடிகையை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த அவரது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகையை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன்!
ஒடிசாவில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் நிகிதா. ஒரு சீரியலில்
நிகிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தினால் இவரது பெயரே நிகிதா என்றாகிவிட்டது.
30 வயதை கடந்த நிகிதாவுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. லிபன் சாஹூ என்பவரை
திருமணம் செய்து கொண்ட நிகிதாவுக்கு நான்கு மாதத்தில் கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த
வாரம் திடீரென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிகிதா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக
தெரிவிக்கப்பட்டது. வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து நிகிதான உயிரிழந்துவிட்டதாக
அவரது கணவர் லிபன் கூறி வந்தார். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தனது மகளை தனது
மருமகன் லிபன் கொலை செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் நிகிதாவின் தந்தை புகார் அளித்தார்.
சில நாட்களாகவே தனது
மகளுக்கும் – மருமகனுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாகவும் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு
வந்த போதும் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்ததாகவும் நிகிதா தந்தை கூறியுள்ளார்.
பிரச்சனையை தீர்க்க இருவரும் மொட்டை மாடிக்கு சென்றதாகவும், சிறிது நேரத்தில் தனது
மகளின் அலறல் சப்தம் கேட்டதாகவும் நிகிதாவின் தந்தை தெரிவித்துள்ளார். உடனடியாக மேலே
சென்று பார்த்த போது கீழே தனது மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக அவர் கூறியுள்ளார்.
தனது மருமகனிடம்
என்ன நடந்தது என்று கேட்ட போது நிகிதா தவறி விழுந்துவிட்டதாக கூறியதாகவும் நிகிதாவின்
தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் வாக்குவாதத்தின் போது தனது மகளை தனது மருமகன் தான் மாடியில்
இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்திருப்பதாகவும் நிகிதாவின் தந்தை கூறியுள்ளார்.
இதனையே காவல் நிலையத்தில் புகாராகவும் நிகிதாவின் தந்தை அளித்தார்.
இதனை தொடர்ந்து நிகிதாவின்
தந்தையை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது லிபன் முன்னுக்கு
பின் முரணாக பேசியுள்ளார். இதனை அடுத்து மனைவியை கொலை செய்ததாக நிகிதாவின் கணவர் லிபன்
கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகையை கொலை செய்ததாக அவரது கணவரை போலீசார் கைது செய்திருப்பது
ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.