தந்தையே என்னிடம் தவறாக நடந்தார்! பிரபல நடிகை ஷாக் தகவல்!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் ஓரின சேர்கையாளர்களின் உரிமைக்காக போராடும் பெண் வழக்கறிஞர் ஹெலன் டீஜெனெரெஸ் ஆவார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியில் தற்போது வாழ்ந்து வருகிறார்.


தன்னுடைய கடந்த கால வாழ்க்கையயில் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளை சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் மிகுந்த வருத்ததோடு பகிர்ந்து கொண்டார்.   

ஹெலன் நெட்பிலிக்ஸில் இரண்டாவது சீஸன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்.  இவர்  கடந்த சில நாட்களுக்கு முன்பு டேவிட் லெட்டர்மேன் நடத்தும் பிரபல ஷோ ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஹெலன்,  இளம் வயதில் தன்னுடைய அம்மாவின் இரண்டாவது கணவரால் தான் பாலியல் ரீதியாக பெரும் துன்பத்தை அடைந்ததாக கூறினார்.

ஹெலனின் அம்மாவின் பெயர் "பெட்டி". இவர் மார்பக புற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது ஹெலெனிற்கு சுமார் 15 வயது. புற்று நோயால் பாதிக்கபட்டிருந்த ஹெலனின் தாயார் அடிக்கடி புற்றுநோய் சிகிச்சைக்காக வெளியூருக்கு சென்று விடுவார். 

ஹெலனின் தாயார் வீட்டில் இல்லாத  சமையத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளான் பெட்டியின் இரண்டாவது கணவர். புற்று நோயால் பாதிக்கபட்டிருந்த பெட்டிக்கு, அவருடைய மார்பகம் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த  நய வஞ்சகரின் கண்கள் ஹெலனின் மீது திரும்பியுள்ளது.

அப்போது அவன் "உன் அம்மாவை என்னால கஷ்டப்படுத்த முடியாது, அதற்கு பதிலாக நான் உன் மார்பகங்களை  சுவைக்க ஆசைப்படுகிறேன், மேலும் நீ இதற்கு ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும்" என்று காட்டாயப்படுத்தியும் உள்ளார். இதனை கேட்ட ஹெலன் தன் அம்மாவிற்கு எந்த வித கஷ்டமும் வரக்கூடாது என்று செய்வது அறியாது அந்த நயவஞ்சகனின் ஆசைக்கு இணங்கியுள்ளார்.

மீண்டும் மீண்டும்  அந்த நயவஞ்சகன், இளம் பெண்ணான ஹெலெனிடம் இதே செயலில் ஈடுபட்டு உள்ளார். இதனை பற்றி தன்  தாயாரிடம்  ஒன்றுமே கூறாமல் சில காலம் மிகவும் அவதி பட்டுள்ளார். பின்னர் ஒருநாள் ஹெலெனால் தாங்க முடியாமல் நடந்த அனைத்தையும் பற்றி கூறி உள்ளார். ஆனால்  இந்த சம்பவதை பற்றி சிறிது  கூட நம்பாமல் பெட்டி,  ஹெலெனய் விட்டு பிரிந்து தன்னுடைய இரண்டாவது கணவருடன் 18 வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.  இதற்கு பின் தான் அவரது கணவரின் மீது பெட்டிக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. பின்பு தான் இவர் தன் மகள் ஹெலன் கூறிய அனைத்தும் உண்மை என்று நம்பியுள்ளார்.

பின்னர் பேசிய ஹெலன், "நான் இந்த சம்பவதை பகிர்ந்து கொள்ள ஒரே காரணம், என்னை போன்று எந்த இளம் பெண்களும் அவதி பட கூடாது, மேலும் அவர்கள் தைரியமாக இந்த மாதிரியான நயவஞ்சகர்களிடம் இருந்து தங்களை காத்து  கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் அவர்களை எதிர்த்து போராடும் அளவிற்கு பெண்கள் மனவலிமையோடு இருக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் "குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக பேசுபவர்களை கண்டாலே எனக்கு  மிகுந்த கோபத்தை அளிக்கிறது" என்று மிகுந்த ஆதங்கத்தோடு தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார்.