பெற்றோர் கடும் எதிர்ப்பு..! 4 அடி உயரம் கொண்ட குள்ள காதலனை பிடிவாதமாக கரம்பிடித்த 6 அடி உயர காதலி! கரூரில் ஒரு நெகிழ்ச்சி!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த குள்ள மனிதரான விக்னேஷ்வரனை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா என்ற இளம் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவாகவே பெண்கள் அழகான ஆண்மகனை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதை தங்களுடைய இலட்சியமாக கொண்டிருப்பர். ஆனால் அதை முற்றிலும் பொய்யாக்கும் வகையில் சிவகங்கையை சேர்ந்த பெண்ணொருவர் 4 அடி கொண்ட குள்ள மனிதரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். 

நான்கடி உயரம் மட்டுமே கொண்ட விக்னேஷ்வரன் முகநூலில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பவித்ராவுடன் நட்பு கொண்டிருந்திருக்கிறார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் தங்களுடைய காதலை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

சுமார் மூன்று ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பவித்ராவின் வீட்டிற்கு தெரிந்தவுடன் அவரது பெற்றோர் விக்னேஸ்வரனை மறந்துவிட்டு தாங்கள் கூறுபவர் இடம் கழுத்தை நீட்டுமாறு கட்டளை போட்டுள்ளனர். ஆனால் பவித்ரா தன்னால் விக்னேஸ்வரனை மறக்க இயலாது என்றும் அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார்.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பவித்ரா தன் வீட்டாரையும் பேச்சை கருத்தில் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை அடுத்து பவித்ராவின் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவியது.

இருவரும் சென்று கரூரில் உள்ள காவல் நிலையத்தில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பற்றி விளக்கியுள்ளனர். இதனை கேட்டுக் கொண்ட போலீசார் அவர்கள் இருவரையும் பத்திரமாக தங்க வைத்து அவர்களது பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின்போது பவித்ராவின் பெற்றோர் தங்களால் பவித்ராவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கறாராக கூறி விட்டனர் .

 பின்னர் விக்னேஸ்வரனின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் இருவரையும் தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். காதல் என்பது உடலின் வெளிப்புற தோற்றத்தை வைத்து அமைவதில்லை என்பதை இவர்களது காதல் தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.