தோழியை கல்யாணம் செய்ய ஆம்பளயாக மாறிய இளம் பெண்! அடுத்து நேர்ந்த விபரீதம்!

தனது நெருங்கிய தோழியை திருமணம் செய்ய இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து ஆணாக மாறிய இளம் பெண் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்.


   தனது நெருங்கிய தோழியை திருமணம் செய்ய இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து ஆணாக மாறிய இளம் பெண் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்.

    கேரளாவின் பெருவண்ணாமுழி பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா. திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதே அலுவலகத்தல் பணியாற்றி வந்த இளம் பெண் தனிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அர்ச்சனாவுடன் நெருங்கி பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடையில் காதலாக மாறியது. அதாவது அர்ச்சனாவும் அங்கு பணியாற்றி வந்த தனிசாவும் காதலிக்க ஆரம்பித்தனர்.

   இந்த தகவல் தெரிந்து அர்ச்சனாவை அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டு சென்றார். இதன் பிறகு ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் அர்ச்சனாவும் தனிஷாவும் வாழ ஆரம்பித்துள்ளனர். இந்த சமயத்தில் தனிஷாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா தற்போது என்ன செய்வது என்று தனிஷாவிடம் கேட்டுள்ளார்.

   அதற்கு ஒரு பெண்ணை காதலிப்பதை தங்கள் வீட்டில் ஏற்கமாட்டார்கள் என்று தனிஷா கூறியுள்ளார். எனவே நீ அறுவை சிகிச்சை செய்து ஆணாகிவிட்டால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தனிஷா தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அர்ச்சனா மும்பை சென்று ஆணாக மாறும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கேரளா திரும்பினார். மேலும் தனது பெயரையும் தீபு என்று மாற்றிக் கொண்டார்.

   இந்த நிலையில் ஆணாக மாறிய தீபு என்கிற அர்ச்சனா தனிஷாவை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். இதற்கு தனிஷாவும் மும்முரமாக உதவி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென தனிஷா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தீபு என்கிற அர்ச்சனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் தனிஷா தனது வீட்டில் இருப்பதை தெரிந்து தீபுவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீபு அங்கு சென்ற போது தனிஷா உடன் வர மறுத்துள்ளார்.

   இதனால் தீபு நீதிமன்றத்தை நாடிய நிலையில், அங்கு ஆஜரான தனிஷா தான் தனது பெற்றோர் கூறும் மாப்பிளையை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அர்ச்சனாவுக்கும் தனக்கு தவறான உறவு ஏதும் இல்லை என்று தனிஷா கூறியுள்ளார். அவரை ஆணாக மாறும்படி தான் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அர்ச்சனா கற்பனை உலகில் வாழ்வதாக கூறிவிட்டு தனிஷா சென்றுவிட்டார்.

   இதனால் தற்போது தான் ஆணாக மாறியதால் தனது வாழ்வே போய்விட்டதாகவும், இதற்காக இரண்டு லட்சம் ரூபாயை செலவு செய்தது தான் மிச்சம் என்றும் தீபு