வயிற்று வலி சிகிச்சைக்கு வந்த ஆண்.. திடீரென குழந்தை பெற்றுக்கொண்ட அதிசயம்..! எப்படி நடந்தது விபரீதம்!

இலங்கையில் ஆண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை மாத்தறை மாவட்டத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் ஒருவரை அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வயிற்று வலி என்று அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் அங்கிருந்த அனைவரின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அங்கிருந்த நபர்கள் அந்த இளைஞரின் அடையாள அட்டை உட்பட பல ஆவணங்களை பரிசோதித்தபோது அவர் ஆண் தான் என்று தெரியவந்தது. ஆனால் மருத்துவ சாலையில் இருந்த மருத்துவர்கள் அந்த இளைஞரை பரிசோதித்த போது அவர் ஆணாக மாறிய பெண் என்று தெரியவந்தது .

மேலும் இதனை பற்றி அந்த இளைஞரிடம் விசாரித்த போது பாதுகாப்பை கருதி தான் ஆணாக மாறி உள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அந்த இளைஞர் பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் ( வயது 26) எனவும், அவர் முச்சக்கர வண்டி சாரதியாகவும் இருந்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அந்த இளைஞரை மருத்துவர்கள் பெண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.  அந்த இளைஞர் தான் ஆணாக மாற வேண்டும் என்பதற்காக தனது மார்பகங்களை அறுவைச் சிகிச்சை மூலம்  அகற்றி உள்ளார். இதனால் பிறந்த அந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண் ஒருவர் ஆண் ஆக மாறியிருக்கும் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.