இளம் பெண்ணுக்கு காலையில் பிரசவம்! மாலையில் திருமணம்! திண்டிவனம் பகீர்!

விழுப்புரம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனக்குப் பிரசவம் நடந்த அதே நாளில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடவும் பாக்கம் என்னும் ஊர் அமைந்துள்ளது இங்கு கோகிலா என்ற இளம்பெண் அதே பகுதியில் உள்ள பரமசிவம் என்பவருடன் நெருங்கி பழகியிருக்கிறார்கள். கோகிலா அருகில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் காதலித்து வந்த நிலையில் மிகவும் நெருங்கி பழகியுள்ளனர்.

பின்னர் கோகிலா பரமசிவம் மூலம் கர்ப்பம் அடைந்துள்ளார் . திருமணமே ஆகாமல் அந்த இளம்பெண் கர்ப்பம் தரித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இதுகுறித்து பரமசிவம் வீட்டில் பேசப்பட்டு பொழுது அவர்கள் கோகிலாவை தங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதிக்க வில்லை . இதனால் போக்கில் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

கோகிலாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று திண்டிவனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி அவர்கள் இருவரது சம்மதத்தையும் பெற்றனர்.

 இதனை அடுத்து கோகிலா மற்றும் பரமசிவன் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது . குழந்தை பிறந்த அதே நாளில் இருவருக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.