தாலி கட்டிக்கமாட்டேன்...! ஆனால்..! கொங்குத் தமிழனை வித்தியாசமான முறையில் கரம்பிடித்த ஸ்வீடன் இளம் பெண்!

ஸ்வீடனைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தாரணி என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.


திருச்செங்கோட்டில் சாணார்பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சண்முகவேல் தமிழரசி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தரணி என்ற மகன் உள்ளார். தரணி பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஸ்வீடனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

ஸ்வீடனில் பணியாற்றி வந்த தரணி அங்கு தன்னுடன் வேலை புரிந்து வந்த மரினா என்பவருடன் பழகி வந்துள்ளார் . அவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது . இவர்கள் காதல் விவகாரத்தை பற்றி தரணி தன்னுடைய வீட்டின் பெரியவர்களிடம் கூறியிருக்கிறார் .

பின்பு இவர்களது காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டிய உடன் இருவருக்கும் திருமணம் நிச்சயம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் இருவருக்கும் சாணார்பாளையம் பகுதியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணம் சற்று வித்தியாசமாக இந்து கிறிஸ்தவம் மற்றும் சுயமரியாதைபடி நடைபெற்றுள்ளது.

காதலுக்கு மொழி , இனம் , நாடு, மதம் என எதுவுமே தெரியாது என்பதை இந்த காதல் ஜோடிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.