அம்மு குட்டி எனும் சுசி..! அதீத அன்பு..! ரூ.1 லட்சம் பேமென்ட்! டிக் டாக் லீலைகள்..! என்னாச்சு தெரியுமா?

டிக் டாக் மூலம் இளைஞரை ஏமாற்றி 97000 ரூபாய் மோசடி செய்த இளம்பெண் அம்மு குட்டி எனும் சுசியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


மதுரை மாவட்டத்திலுள்ள எல்லிஸ் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு வயது 23. இவர் மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ராமச்சந்திரன் பொதுவாக டிக் டாக் செயலியை அதிகமாக பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டவர். தற்போது நிலவிவரும் லாக்டவுனால் டிக் டாக் செயலியை அதிக அளவு இவர் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக திருப்பூரை சேர்ந்த சுசி என்ற பெண் டிக்டாக்கில் அம்மு குட்டி என்ற பெயருடன் இவருக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

இதன் காரணமாக ராமச்சந்திரன் டிக் டாக் மூலம் அறிமுகமான சுசி என்ற அம்மு குட்டி உடன் அதீத அன்பு காட்டியுள்ளார். பின்னர் பேஸ்புக்கிலும் இவர்கள் இருவரும் நெருங்கி பேசியுள்ளனர். இந்நிலையில் சுசி என்ற அம்மு குட்டி ராமச்சந்திரனிடம் பணத்தை கறப்பதற்காக தனது குடும்பத்தில் பிரச்சினை எனவும் மருத்துவ செலவிற்காக பணம் தேவைப்படுகிறது எனவும் ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார்.இதனை நம்பிய ராமச்சந்திரன் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு 97,000 ரூபாய்வரை அனுப்பியுள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட சுசி அதன்பிறகு டிக் டாக் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் தலை காட்டவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த ராமச்சந்திரன் மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் சுசியை தேடி தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் காரணமாக திருப்பூர் அருகே வீரபாண்டி அருகே உள்ள தனது வீட்டில் பதுங்கியிருந்த சுசியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து டிக் டாக் மூலம் மோசடி செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி தற்போது சிறையில் அடைத்துள்ளனர். போலீசார் விசாரணையில் ஆடம்பரமாக வாழ நினைத்த சுசி டிக் டாக்கை ஒரு கருவியாக பயன்படுத்தி பலரிடமும் இதுபோல பண மோசடி செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.