பொது இடத்தில் இளம் நடிகரை கட்டிப்பிடித்து இளம் பெண் செய்த செயல்! வைரல் புகைப்படம்!

ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான வருண் தவானை, ரசிகை ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கட்டிப்பிடித்தார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


பாலிவுட்டில் முன்னனி நடிகர்களில் ஒருவரான வருண் தவான், "ஸ்ட்ரீட் டான்சர் 3D" என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் சென்று இருந்தார்.  தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடித்து  கொண்டு சொந்த ஊருக்கு விமானம் மூலம் திரும்பினார்.

விமான நிலையத்தில் வருண் தன்னுடைய செல் போனில் பேசிய படியே நடந்து வந்தார்.  அவர் வருவதை பார்த்த பெண் ரசிகை ஒருவர், வருண் தவானை பார்த்ததும் துள்ளி குதித்து ஓடி போய் அவரை கட்டிப்பிடித்தார். மேலும் வருனோடு இணைந்து செல்பியும் எடுத்துக் கொண்டார் அந்த பெண் ரசிகை. 

இசசம்பவம் விமான நிலையத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.   வருண் தவானின், "ஸ்ட்ரீட் டான்சர் 3D" திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 24-இல்  வெளியாகும் என படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.