வேறு பெண்ணுக்காக கழட்டி விட்ட காதலன்! கை நரம்பை அறுத்துக் கொண்ட ஐடி பெண் ஊழியர்!

காதலித்து ஏமாற்றிய காதலனை தண்டிக்க வலியுறுத்தி, ஐடி பெண் ஊழியர் கை நரம்பை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்தான் இவ்வாறு செய்துகொண்டுள்ளார். போரூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும், அவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், பாலவாக்கத்தைச் சேர்ந்த பிரித்விராஜன் என்பவர் பழக்கமாகியுள்ளார்

 

பழக்கம் நெருங்கி, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு, இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். திருமணம் செய்துகொள்ள திட்டமிட்ட நிலையில், திடீரென பிரித்விராஜன் தன்னை கைவிட்டு விட்டதாக, இளம்பெண் கூறுகிறார்

 

தற்போதைய நிலையில், பிரித்விராஜனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அடுத்து, அவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, சம்பந்தப்பட்ட பெண், வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதில், திருமண ஆசை காட்டி, பிரித்விராஜன் தன்னிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்இதன்பேரில், பிரித்விராஜன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, புகார் கொடுத்த பெண், தனது கை நரம்பை அறுத்துக் ண்டார்இதையடுத்து, அவர் பரங்கிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

அதேசமயம், பிரித்விராஜன் தந்தை வைகோவின் ம.தி.மு.க கட்சியின் அரியலூர் மாவட்ட விவசாயி அணிச் செயலாளராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் பிருத்வி ராஜன் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு வாங்கியிருப்பதால், அவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று, வடபழனி மகளிர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.