நயன்தாரா! சமந்தா! பிரபல நடிகைகளுக்கு ரேட் பேசிய மேனேஜர் அரஸ்ட்!

நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பிரபல நடிகைகளுக்கு ரேட் பேசிய நடிகைகளின் மேனேஜர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெலுங்கு திரையுலகின் முன்னணி மேனேஜர்களில் ஒருவர் கல்யான். இவரை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தெலுங்கு திரையுலகில் கல்யானை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால் தற்போது நம்பர் ஒன்னாக இருக்கும் நயன்தாரா, சமந்தா, காஜல் முதல் புதுமுக நடிகைகள் வரை பலருக்கு மேனேஜராக இருந்தவர் கல்யான்.

   நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வாங்கி கொடுப்பது, நடிகைகளுக்கு விளம்பர தூதர் பொறுப்புகளை பெற்றுத் தருவது, நடிகைகளுக்கு வெளிநாடு கலை நிகழ்ச்சி வாய்ப்பு வாங்கி தருவது என கல்யான் செம பிசி மேன். கல்யானுக்கு அனைத்துவிதமான இயக்குனர்கள், விளம்பர நிறுவனங்களுடனும் தொடர்பு உள்ளதால் அவரை பிரபல நடிகைகள் கூட சுற்றி சுற்றி வருவது உண்டு.

   ஆனால் நடிகைகள் பிரபலம் ஆன பிறகு கல்யானை கழட்டிவிட்டு தனக்கு பிடித்தமான ஒருவரை தனது மேலாளர் ஆக்கிவிடுவார்கள். அந்த வகையில் கல்யான் மேனேஜராக இருந்த நடிகைகள் பலர் தற்போது தங்களின் மனம் கவர்ந்தவர்களின் கன்ட்ரோலில் சென்றுவிட்டனர். இதனால் அவர்களை வைத்து காசு பார்க்க கல்யான் முடிவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

  விழாவிற்கு பிரபல நடிகைகள் நயன்தாரா, காஜல், சமந்தா போன்ற சீனியர் நடிகைகளுடன் தற்போது பீல்டில் இருக்கும் ரேஷ்மிகா உள்ளிட்டோரையும் அழைத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு ரேட் பேசி அந்த தொகையையும் கல்யான் வாங்கியுள்ளார். இதனை நம்பி தங்கள் ஓட்டலுக்கு நயன்தாரா, காஜல், சமந்தா வருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.

   ஏராளமான ரசிகர்களும் நயன்தாரா உள்ளிட்டோரை பார்க்க அந்த ஓட்டலுக்குள் கட்டணம் செலுத்தி புகுந்துள்ளனர். ஆனால் கல்யான் சொன்னது போல் ஒரு நடிகை கூட வரவில்லை. ஏன் கல்யானும் கூட ஆல் எஸ்கேப்  ஆகியிருந்தார். இதனால் அங்கு வந்த வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாமல் ஓட்டல் நிர்வாகம் திணறியது. பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தற்போது கல்யான் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.