மார்க்கெட் அவுட்டான ஹீரோ! குடும்பத்தை காப்பாற்ற பழைய தொழிலில் இறங்கிய மனைவி! கோடம்பாக்கம் கிசுகிசு!

ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்ட ஹீரோவான கணவன் மார்க்கெட் இழந்து வீட்டில் முடங்கிய நிலையில் குடும்பத்தை காப்பாற்ற அவரது மனைவியான தொலைக்காட்சி பிரபலம் மீண்டும் பழைய தொழிலில் இறங்கியுள்ளார்.


ஒரு காலத்தில் சன் மியூசிக்கின் ஸ்டார் விஜே இவர். கிரிக்கெட் வீரர் முரளி விஜயுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர். அதன் பிறகு வேறு சிலருடன் காதல் என்று இந்த விஜே பெயர் அடிபட்டது.

ஆனால் திடீரென ஒரே படத்தின் மூலம் ஓரளவு புகழ் பெற்ற நாயகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த படம் வெளியான சமயத்தில் ஹீரோவுக்கு பட வாய்ப்புகள் லைன் கட்டின. ஆனால் அது எதையும் ஹீரோ சரியாக பயன்படுத்தவில்லை.

இதனால் ஹீரோவை திரையுலகம் மறந்த நிலையில், விடா முயற்சியுடன் ஒரு படத்தில் காதாநாயகனாக நடித்து முடித்தார். படம் வெளியான வேகத்தில் பெட்டிக்குள் சென்றுவிட்டது. இதன் பிறகு ஹீரோவை கண்டுக்க ஆள் இல்லை.

ஹீரோவை நம்பி நம்ம வீஜே தனது வாழ்க்கையை ஹைபையாக மாற்றி வைத்திருந்தார். இடையே இருவருக்கும் குழந்தை வேறு பிறந்தது. நாயகன் வீட்டில் முடங்கியதால் குடும்பம் தடுமாற, தனது பழைய தொழிலில் களம் இறங்கியுள்ளார் அந்த வீஜே.

தனது ஆஸ்தான தொலைக்காட்சிக்கு தூதுவிட ஆனால் அவரை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் அந்த தொலைக்காட்சியின் போட்டித் தொலைக்காட்சியில் சேர அங்கு எதிர்பார்த்த வருமானம் இல்லை. இதனால் முன்னர் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அவதாரம் எடுத்து சினிமா விழாக்களில் கவர்சச் உடையில் வலம் வர ஆரம்பித்துள்ளாராம்.