பிரபல டிவி நடிகையை நண்பர்கள் முன்னிலையில் அடித்து உதைத்த காதலன்!

தனது காதலன் தன்னை தனது நண்பர்கள் முன்னிலையிலேயே அடித்து உதைத்ததாக பிரபல டிவி நடிகை தெரிவித்துள்ளார்.


   இந்தி தொலைக்காட்சி நேயர்களுக்கு பெயரை சொன்ன உடன் நினைவிற்கு வரக்கூடியவர் டினா தத்தா. தயான் எனும் நிகழ்ச்சியில் ஜான்வி எனும் கேரக்டர் மூலம் இந்தி டிவி ரசிகர்கள் மத்தியில் டினா மிகவும் பிரபலம். இது மட்டும் இன்றி பியர் பேக்டார் எனும் ரியாலிட்டி ஷோ மூலமும் டினா பிரபலம் ஆனார்.

   தற்போது பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் டினா தத்தா அண்மையில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது வாழ்வில் தான எதிர்கொண்ட செக்ஸ் பிரச்சனைகள் மற்றும் கொடூரங்களை டினா தத்தா விவரித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது பிரபல நடிகையாக இருக்கலாம்.

   ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்னரே எனக்கு காதலன் உண்டு. என் தோழி ஒருவர் மூலமாக எனக்கு அவன் அறிமுகம் ஆனான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. இதனால் நான் அவனை காதலிப்பதாக கூறினேன். எங்கள் காதல் ஐந்து வருடங்கள் வரை நீடித்தது. ஆனால் அதன் பிறகு முறிந்துவிட்டது. காதலை காப்பாற்ற நான் எவ்வளவோ முயன்றேன்.

   என் காதலன் அளித்த சித்ரவதைகள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். மன ரீதியாக எனக்கு என் காதலன் நிறைய பிரச்சனைகளை கொடுத்தான். உடல் ரீதியாகவும் அவன் எனக்கு கொடுத்த தொந்தரவுகள் வார்த்தைகளார் விவரிக்க முடியாது. எதற்கெடுத்தாலும் அவன் சந்தேகப்படுவான். என்னை எனது நண்பர்கள் முன்னிலையில் பொது இடத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளான்.

   இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால் தான் அவனுடனான காதலை முறித்துக் கொண்டேன். யோசித்துப் பாருங்கள் நண்பர்களுக்கு முன்னர் வைத்து காதலியை அடிப்பவன் எப்படி மனிதாக இருக்க முடியும்? இவ்வாறு டினா தத்தா கூறியுள்ளார். ஆனால் காதலன் பெயரை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.