கொரோனா பீதி..! முகத்தில் மாஸ்க்குடன் மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்..! அப்போ பர்ஸ்ட் நைட்?

பார்க்காமலேயே காதலிப்பதாக பலர் சொல்வார்கள் ஆனால் முகத்தை பார்க்காமலேயே தாலி கட்டிய ருசிகர சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.


உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது கொரனா வைரஸ். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவ்வளவு சீக்கிரம் அந்த வைரஸ் இந்தியாவை விட்டு செல்வதாக இல்லை. எனினும் முடிந்தவரை பாதுகாப்பாக இருப்பதற்காக மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்கின்றனர்.

பார்க்கும் இடம்எல்லாம் அனைத்து தரப்பினரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்வதை நாம் பார்த்திருப்போம். இதற்கிடையே ஆந்திராவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களே முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு மணமேடையில் அமர்ந்திருந்தனர். இது திருமணத்திற்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேற்கு கோதாவரி மாவட்டம் உங்குட்டூர் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்கள், புரோகிதர் மற்றும் உறவினர்கள் என அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தினர். இறுதியாக தாலி கட்டும்போது கூட போட்டோகிராபருக்கு போஸ் கொடுக்காமல் மாஸ்க் அணிந்தபடியே தாலி கட்டி முடித்தார் மாப்பிள்ளை.

இது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தது. சாந்தி முகூர்த்தத்தின்போது கூட மாஸ்க் அணிந்து கொள்வார்களா என்றெல்லாம் கேலியுடன் கேள்விகள் வேண்டாம். அடுத்த செய்திக்கு செல்வோம்.