அமைச்சர் உதயகுமார் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும்..? -அறப்போர் இயக்கம் கோரிக்கை

கிராமப்புறங்களில் இணையம் மூலம் இணைக்கும் பாரத்நெட் டெண்டர் விவகாரம், பல்வேறு வகையில் அ.தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே விட இருந்த டெண்டரை மத்திய அரசின் துறை நிறுத்தி வைத்தது.


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோன்று, ‘அந்த டெண்டரில் மேலும் சில அம்சங்கள் சேர்க்கச்சொல்லிதான், டெண்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் உதயகுமார் கூறி இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் உதயகுமார் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அறப்போர் இயக்கம் புகாரின் பெயரில் கடந்த மாதம் ரூ 2000 கோடி பாரத்நெட் டெண்டர் மத்திய அரசின் DPIIT துறை ரத்து செய்தது. டெண்டர் விதிகள் பாரபட்சமாகவும் போட்டிக்கு எதிரானதாகவும் உள்ளது என்று ரத்துக்கான காரணத்தையும் DPIIT குறிப்பிட்டு இருந்தது. 

எனவே முறைகேடு நிரூபணம் ஆனதால் இதில் ஈடுபட்ட அமைச்சர் உதயகுமார், ஹன்ஸ் ராஜ் வர்மா IAS , ரவிச்சந்திரன் IAS மற்றும் மற்றவர்கள் மீது ஊழல் கண்காணிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோரி இன்று புகார் அனுப்பியுள்ளனர்.

அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ன?