ஊழியர்களின் சம்பள பணத்தை பிடித்தம் செய்து மோசடி! விஷாலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஷாலுக்கு, எழும்பூர் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.


எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள்  மலர்மதி  அவர்கள் , நடிகர் விஷாலுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளார். நடிகர் விஷால் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த  டிடிஎஸ் வரியை முறையாக வழங்காததால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் விஷாலுக்கு பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளனர்.

நடிகர் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாட்களின் சம்பளத்தில் டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. பிடித்தம் செய்யப்பட்ட இந்த வரியை முறையாக வருமான வரித்துறையில் செலுத்துவது முறையாகும் . ஆனால் இதை செய்ய தவறிவிட்டார் நடிகர் விஷால் .

இதனையடுத்து நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை சார்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது . இருப்பினும் இந்த சம்மன்நிற்கு  பதிலளிக்காத நடிகர் விஷால் மீது வருமான வரி துறையினர்  எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளனர் .

இதன்படி நடிகர் விஷால் ஆகஸ்ட் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. 

ஆனால் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகமல்  தவிர்த்துள்ளார் . இதனை விசாரித்த நீதிபதிகள் மலர்மதி அவர்கள் நடிகர் விஷாலுக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவும் , டிடிஎஸ் வரியை சரியாக செலுத்தாத காரணத்தினாலும் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளார்.